தொடர் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

  தினத்தந்தி
தொடர் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

மும்பை,வர்த்தகப்போர் அச்சத்தால் இம்மாத தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன்பின்னர், பங்குச்சந்தை ஏற்றம்பெற தொடங்கியது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றம் பெற்று வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த வகையில் இந்திய பங்குச்சந்தையில் இன்று , 56 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 121 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 454 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 758 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 201 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 642 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.200 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 79 ஆயிரத்து 606 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 148 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 101 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 490புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 919 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மூலக்கதை