டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு

  தினத்தந்தி
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு

சென்னை, தமிழக சட்டசபையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி, நிறைவாக புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-"தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், விற்பனையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் என 1-4-2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.64.08 கோடி கூடுதல் செலவாகும்."இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை