சீனா: பஸ்சுக்கு காத்திருந்த மாணவர்கள் மீது மோதிய கார் - 5 பேர் காயம்

பீஜிங்,சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஜின்ஹுவா நகரில் தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில், பள்ளி முடிந்து நேற்று மாலை மாணவ-மாணவியர் பஸ்சுக்கு காத்திருந்தனர். அப்போது சாலையில் வேகமாக வந்த கார், பஸ்சுக்கு காத்திருந்த மாணவர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்தனர். மேலும், காயமடைந்த 5 பேரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
