தமிழகத்தில் ரூ.172 கோடி வசூலித்த "குட் பேட் அக்லி"

சென்னை,அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் அஜித் ரசிகர்களை கடந்தும் வரவேற்பை பெறத் தொடங்கியிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'குட் பேட் அக்லி' படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இது அஜித்தின் திரையுலக வாழ்வில், 2 நாட்களில் ரூ.100 கோடியைத் தொட்ட முதல் படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது. 'குட் பேட் அக்லி' படம் உலகளவில் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 'குட் பேட் அக்லி' திரைப்படம், தமிழ்நாட்டில் வெளியான 15 நாட்களில் ரூ.172.3 கோடி வசூலைக் கடந்துள்ளதாக ரோமியோ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.A post shared by Raahul A (@romeopicturesoffl)
மூலக்கதை
