சூர்யாவின் 'ரெட்ரோ' படத்துடன் மோதுவது குறித்து பேசிய 'ஹிட் 3' நடிகர் நானி

  தினத்தந்தி
சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதுவது குறித்து பேசிய ஹிட் 3 நடிகர் நானி

ஐதராபாத்,நானி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஹிட் 3. இதில் நானிக்கு ஜோடியாக கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். வருகிற 1-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இதேநாளில்தான் சூர்யாவின் 'ரெட்ரோ' படமும் வெளியாக இருக்கிறது. இதனால் 2 படங்கள் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், ஹிட் 3 படத்தின் புரமோசனில் நானியிடம் சூர்யாவின் 'ரெட்ரோ' படத்துடன் பாக்ஸ் ஆபீசில் மோதுவது குறித்து கேட்கப்பட்டது.அதற்கு அவர் இரு படங்களும் வெற்றிபெற வாழ்த்துவதாக கூறினார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ரெட்ரோ' படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

மூலக்கதை