கோவை: ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதிக்கு சென்னை பூந்தமல்லியில் உள்ள பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். அவர்கள் ஆழியார் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4-ம் ஆண்டு மாணவர்கள் தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால், நீரில் மூழ்கி மாணவர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவல் கேட்டு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மாணவர்களின் உடலையும் மீட்டனர். சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மூலக்கதை
