திருவனந்தபுரம் - மங்களூரு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் அறிவிப்பு

திருவனந்தபுரம், திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மங்களூரு செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்: 061613) வருகிற மே மாதத்தில் 05, 12, 19, 26, ஜூன் மாதத்தில் 02, மற்றும் 09 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து (திங்கள் கிழமை) மாலை 5.30 மணியளவில் புறப்படும்.மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06164) வருகிற மே மாதத்தில் 06, 13, 20, 27, ஜூன் மாதத்தில் 03 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் மங்களூரில் இருந்து (செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணியளவில் புறப்படும்.பெட்டி அமைப்பு: 14- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2- லக்கேஜ் கம் பிரேக் வேன்கள்
மூலக்கதை
