பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை செயலாளர்கள் மாற்றம்

  தினத்தந்தி
பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை செயலாளர்கள் மாற்றம்

பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை செயலாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:-பொதுப்பணித்துறை செயலாளராக செயல்பட்டு வந்த ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். நீர்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறை செயலாளராக இருந்து வந்த மங்கத் ராம் சர்மா பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை