எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  தினத்தந்தி
எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை,சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.சமீர் என்ற பெயரில் மதியம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும், ஆர்.டி.எக்ஸ் வகையில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எடப்பாடி பழனிசாமி வீட்டின் அனைத்து பகுதிகளுக்கு ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை