பஹல்காம் தாக்குதல் விவகாரம்: இந்தியாவுக்கு இலங்கை ஆதரவு

  தினத்தந்தி
பஹல்காம் தாக்குதல் விவகாரம்: இந்தியாவுக்கு இலங்கை ஆதரவு

கொழும்பு, இலங்கை அதிபர் திசநாயகா, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இலங்கையின் ஆதரவை தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். விரைவில் பதற்றம் தணியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதுபோல், இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி தனது ஆதரவை தெரிவித்தார். பஹல்காம் தாக்குதலுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை