சில நடிகர்கள் பெண்களை மதிப்பவர்கள் போல காட்டிக்கொள்வார்கள்; ஆனால்... - நடிகை மாளவிகா மோகனன்

  தினத்தந்தி
சில நடிகர்கள் பெண்களை மதிப்பவர்கள் போல காட்டிக்கொள்வார்கள்; ஆனால்...  நடிகை மாளவிகா மோகனன்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் மாளவிகா மோகனன், தற்போது பிரபாஸ் ஜோடியாக தெலுங்கில் 'தி ராஜா சாப்' படத்திலும், மோகன்லால் ஜோடியாக 'ஹிருதயபூர்வம்' என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவில் ஆண்-பெண் வேறுபாடு பார்க்கப்படுவதாக மாளவிகா மோகனன் வேதனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, "சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பெண்களை மதிப்பவர்கள் போல தங்களை காட்டிக்கொள்வார்கள். அந்த முகமூடியை சரியான நேரத்தில் அணிந்து நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.எந்தெந்த நேரங்களில் பெண்களை மதிக்கும் வகையில் பேசவேண்டும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கேமராவுக்கு பின்னால், அவர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள்? என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஏன் இந்த பாசாங்குத்தனம். ஆண் என்றால் ஒருமாதிரியும், பெண் என்றால் ஒருமாதிரியும் பார்க்கும் போக்கு சினிமாவில் ஆழமாக வேரூன்றி கிடக்கிறது. இது எப்போது முடிவுக்கு வரப்போகிறது? என்று தெரியவில்லை" என்று கூறினார்.

மூலக்கதை