பஹல்காம் பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும்- தேசிய மனித உரிமைகள் ஆணையம்

புதுடெல்லி, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. விடுமுறையை கழிக்கச் சென்ற நிராயுதபாணிகளான அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலை ஆணையம் கண்டிக்கிறது. மனித உரிமை மீறல்களுக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய காரணங்களில் ஒன்று என்று பல்வேறு மன்றங்களில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு உள்ளது. இந்த அச்சுறுத்தலுக்கு அவர்களை பொறுப்பேற்க வைப்பதற்கும் நேரம் வந்துவிட்டது.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
மூலக்கதை
