தெலுங்கானாவில் 30 குடிசைகள் எரிந்து சாம்பல்

ஐதராபாத்,தெலுங்கானா மாநிலம் குட்லூரு கிராமத்தில் வாழும் மக்கள் பலரும் ஓலை குடிசைகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள குடிசையில் திடீரென தீ ஏற்பட்டது. இந்த தீயானது கிடுகிடுவென அருகில் உள்ள குடிசைகளில் பரவத்தொடங்கின. இதனைக்கண்ட கிராம மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. மேலும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
