உசிலம்பட்டி அருகே புலிகுத்தி நடுகல்

  தினமலர்
உசிலம்பட்டி அருகே புலிகுத்தி நடுகல்



உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே குறுவாளால் புலியின் வயிற்றில் வீரன் குத்தி கிழிப்பதும், அதே நேரத்தில் புலி தன் வாயால் வீரனின் தலையில் கடித்த படி உள்ள சிற்பத்துடன் கூடிய 400 ஆண்டுகள் பழமையான புலிகுத்தி நடுகல்லை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர் கண்டறிந்தனர்.

உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனுார் ஊராட்சி குன்னுாத்துப்பட்டி சின்னமூப்பர் தோட்டத்து பகுதியில் உள்ள புலி குத்தி நடுகல் குறித்து அவர்கள் கூறியதாவது:

இந்த நடுகல் 7 அடி உயரம் 2 அடி அகலம், மூன்று பக்கங்களில் அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் இரண்டு அடிக்கு ஒரு அடுக்கு என 4 அடுக்குகளிலும், பக்கவாட்டில் உள்ள இரு புறமும் 5 அடுக்குகளிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

முன் பகுதியில் மூன்று அடுக்குகள் மட்டும் வெளியே காணப்படும் நிலையில் மேலும் சிற்பங்கள் உள்ள அடுக்குகள் மண்ணில் புதைந்துள்ளது. நடுகல்லின் மேல்பகுதியில் தலைவன் புலியை குத்தி கொல்வது போன்றும், குத்திய வாள் புலி வயிற்றை பிளந்து வெளியேறியுள்ளதையும், அதே நேரத்தில் புலி அவரது தலையை கடித்து குதறுவது போன்றும், இப்போராட்டத்தில் நாய் ஒன்றும் புலியை தாக்குவது போல தத்ரூபமாக செதுக்கியுள்ளனர். அடுத்த அடுக்கில் இந்த போராட்டத்தில் இறந்த தலைவனை தேவதைகள் வானுலகத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற காட்சி, மூன்றாவது அடுக்கில் தலைவன் குதிரை மீது ஏறி வருவது போன்றும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

400 ஆண்டுகள் பழமையான நடுகல்லாக இருக்கக்கூடும். ஏற்கனவே உசிலம்பட்டி நல்லுத்தேவன்பட்டி அருகே 8 அடி உயரத்தில் தனிச்சிற்பமாக புலிக்குத்தி கல் கிடைத்துள்ளது.

புலிகுத்தி நடுகற்கள் கிடைக்கும் வழி பாண்டியர்கள் காலத்தில் இருந்து சேர நாட்டிற்கு வணிகர்கள் செல்லும் பெருவழிப்பாதையாக இருந்த பகுதிகள். நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் இந்த பாதையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன என்றனர்.

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே குறுவாளால் புலியின் வயிற்றில் வீரன் குத்தி கிழிப்பதும், அதே நேரத்தில் புலி தன் வாயால் வீரனின் தலையில் கடித்த படி உள்ள சிற்பத்துடன் கூடிய 400 ஆண்டுகள்

மூலக்கதை