கணவர் குறித்து கிண்டல்; டிரம்புக்கு ஹாலே பதிலடி
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டி கடுமை யடைந்துள்ளது. இந்திய அமெரிக்கரான நிக்கி ஹாலேவின் கணவர் குறித்து, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்தார். இதற்கு, ஹாலே பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு நவம்பரில் நடக்க உள்ளது. முன்னதாக, கட்சிகளின் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது.
குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 77, போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே, 52, போட்டியில் உள்ளார்.
மற்ற போட்டியாளர்கள் விலகிய நிலையில், இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். தனிப்பட்ட விமர்சனங்களும் இதில் அடங்கும்.
இந்நிலையில், தெற்கு கரோலினாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்ற டொனால்டு டிரம்ப், ''நிக்கி ஹாலேவின் கணவர் எங்கே? அவர் தொலைவில் உள்ளார் போலிருக்கிறது. அவருக்கு என்னவாயிற்று; எங்கே போய்விட்டார்,'' என, ஹாலேவை கிண்டலடிக்கும் வகையில் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மற்றொரு பிரசார நிகழ்ச்சியில் நிக்கி ஹாலே பேசியதாவது:
சாதாரணமாக, 75 வயதுக்கு மேற்பட்டவர்களின் மனநலம் குறித்து சோதனை செய்வது நல்லது என்று நான் கூறி வருகிறேன்.
என்னுடைய கணவர் மைக்கேல் ஹாலே, ராணுவ மேஜராக உள்ளார். அவர் தற்போது ஆப்ரிக்காவில் உள்ளார்.
ஆனால், எதுவும் தெரியாத டிரம்ப், ராணுவ குடும்பத்தை விமர்சித்துள்ளார். இது போன்றவர்கள், முப்படைகளின் தலைவராக, அதாவது அதிபராக எப்படி இருக்க முடியும். அதிபர் பதவியை விடுங்கள், இது போன்றவர்களுக்கு, டிரைவிங் லைசென்ஸ் கூட வழங்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டி கடுமை யடைந்துள்ளது. இந்திய அமெரிக்கரான நிக்கி ஹாலேவின் கணவர் குறித்து, முன்னாள் அதிபர்