வனவிலங்கு சீண்டலால் அசம்பாவிதங்கள் அதிகரிப்பு ஆபத்தை உணராமல் காட்டு யானையுடன் போட்டோ
மூணாறு: மூணாறு பகுதியில் மறைமுகமாக காட்டு யானைகளை சீண்டுவதால் பல்வேறு விபரீதங்கள் ஏற்படுவதாக தெரியவந்தது.
மூணாறு பகுதியில் ஆரம்ப காலம் முதல் காட்டு யானைகள் உள்ளன. மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு போதிய வாகன வசதிகள் இல்லாதபோது மழை, வெயில் என அனைத்து காலங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்கு தொழிலாளர்கள் உள்பட மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று வந்தனர்.
அப்போது காட்டு யானை உள்பட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருந்தும் அசம்பாவிதங்கள் மிகவும் குறைவாக இருந்தது. அதற்கு மாறாக சமீப காலமாக வன விலங்குகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளன. அச்சம்பவங்களுக்கு வன விலங்குகளின் வழித்தடங்கள் கம்பி வேலி உள்பட பல்வேறு வகைகளில் தடைபடுத்தப்பட்டுள்ளது காரணமாக கருதினாலும் வனவிலங்களை சீண்டுவதால் அசம்பாவிதங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்தது.
குறிப்பாக இரவில் ஜீப் சவாரி என்ற பெயரில் சுற்றுலா பயணிகளை சாகச பயணம் அழைத்துச் செல்லும்போது வாகனங்களை வைத்து சீண்டுகின்றனர். இது போன்று சமீபத்தில் உள்ளூர்வாசிகள் சிலர் சொக்கநாடு எஸ்டேட் பகுதியில் படையப்பா ஆண் காட்டு யானையை சீண்டினர்.
இச்செயல் போன்று யானைகள் உள்பட வனவிலங்களை மறைமுகமாக சீண்டுவதால், அவற்றால் உயிர் பலி உள்பட பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பழைய மூணாறு பகுதியில் நேற்று பகலில் தேயிலை தோட்டத்தில் ஆண் காட்டு யானை நடமாடியது. அதன் அருகில் சென்ற தொழிலாளி ஒருவர் ஆபத்தை உணராமல் வேறொருவரின் உதவியுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மூணாறு: மூணாறு பகுதியில் மறைமுகமாக காட்டு யானைகளை சீண்டுவதால் பல்வேறு விபரீதங்கள் ஏற்படுவதாக தெரியவந்தது.மூணாறு பகுதியில் ஆரம்ப காலம் முதல் காட்டு யானைகள் உள்ளன. மூணாறைச்