அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும்: டிரம்ப் மிரட்டல்

  தினமலர்
அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும்: டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என குடியரசு கட்சி வேட்பாளர் என கருதப்படும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட உள்ளார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

ஓஹியோ மாகாணத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்கா வரலாற்றில் தேர்தல் நடக்கும் நாள் மிகவும் முக்கியமானது ஆகும். மெக்சிகோவில் கார்களை உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்பனை செய்ய சீனா முயற்சித்து வருகிறது. நான் அதிபராக வெற்றி பெற்றால், இது நடக்காது. தன்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால், நாட்டில் ரத்தக்களறி ஏற்படும். இவ்வாறு டிரம்ப் பேசினார்.

எதற்காக ரத்தக்களறி ஏற்படும் என டிரம்ப் பேசினார் எனத் தெரியவில்லை. அமெரிக்காவில் ஆட்டோ தொழில்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பேசும் போது இவ்வாறு டிரம்ப் கூறியதால், தொழில்துறை தொடர்பாக எச்சரிக்கும் விதமாக இப்படி பேசியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என குடியரசு கட்சி வேட்பாளர் என கருதப்படும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் வரும்

மூலக்கதை