செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.

  வலைத்தமிழ்

செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் திட்டத்தில் பெரிய மாற்றம் செய்யப்படவேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாறை மாதிரிகளின் மூலம் இதற்கு முன் அங்கு உயிரினங்கள் வாழ்ந்ததுண்டா என்பது கண்டறியப்படும்.

 

தற்போதுள்ள நிதியை வைத்து 2040ஆம் ஆண்டுக்கு முன்பு செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைக் கொண்டுவர முடியாது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA சொன்னது.

 

அந்தத் திட்டத்துக்குத் தேவைப்படும் 11 பில்லியன் டாலரைப் பெறுவது கடினம்.

 

குறைந்த செலவில், துரிதமான, வித்தியாசமான யோசனைகளை NASA இப்போது எதிர்பார்க்கிறது.

 

இவ்வாண்டின் பிற்பாதிக்குள் அதற்கான தீர்வைப் பெற NASA விரும்புகிறது.

 

செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை