அதிகரித்து வரும் சாலை விபத்து - இதுவரை 1,400 பேர் உயிரிழப்பு! - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மொத்தமாக 1,417 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் சுமார் 1000 பேர் உயிரிழப்பதாக போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட (DIG Indika Hapugoda)தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் நிகழும் 3,000க்கும் மேற்பட்ட சாலை விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் என்றும் அவர் கூறினார்.2023 ஆம் ஆண்டில், சாலை விபத்துகள் குறைவாக இருந்தது. அதில் 2,214 சாலை விபத்துகளில் 2,321 இறப்புகள் மட்டுமே நிகழ்ந்தன எனவும் கூறியுள்ளார். மேலும், 2024 ஜனவரி 01 முதல் ஆகஸ்ட் 10 வரை 1,352 சாலை விபத்துக்களில் இதுவரை 1,417 பேர் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை, கடந்த வருடத்தில் 328 பாடசாலை மாணவர்கள் ஆபத்தான வீதி விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஹப்புகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.