சென்னையில் சைக்கிள் பாதைகள் எங்கே? முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை,தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்டு பாடியபடி சைக்கிளில் பயணம் செய்தார். இது தொடர்பான வீடியோவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் சைக்கிள் பாதைகள் எங்கே? என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னையில் மாநில அரசுத் திட்டங்களின்படியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சைக்கிள் பாதைகளையும் காணவில்லை; வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் சைக்கிள்களையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்? . என தெரிவித்துள்ளார்.