அமெரிக்க ஓபன்: ஸ்வியாடெக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா/ World No. 1 Iga Swiatek knocked out of US Open by Jessica Pegula
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் மோதின.இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். இகா 2-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். ஜெசிகா பெகுலா முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.