தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 22 பேர் கைது - இலங்கை காவல் துறை - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 22 பேர் கைது  இலங்கை காவல் துறை  லங்காசிறி நியூஸ்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் இன்று வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 4 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தேர்தல் தொடர்பில் மொத்தம் 173 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி, அவை வன்முறைச் செயல்கள் தொடர்பான புகார்கள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான புகார்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.இதுவரையில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 119 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பான 54 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதுடன் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தல்துவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை