அடுத்த வாரம் நிகழவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தல் - வாக்குச் சீட்டு விநியோகிக்கும் பணி ஆரம்பம் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
அடுத்த வாரம் நிகழவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தல்  வாக்குச் சீட்டு விநியோகிக்கும் பணி ஆரம்பம்  லங்காசிறி நியூஸ்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சுமார் 3 மில்லியன் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் பணிகள் இதுவரை நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.செப்டம்பர் 03 ஆம் திகதி தொடங்கிய உத்தியோகபூர்வ வாக்குப்பதிவு அட்டை விநியோக செயல்முறை செப்டம்பர் 14 வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமை (செப். 08) வார இறுதி நாளாக இருந்தாலும் உத்தியோகபூர்வ வாக்களிப்பு அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிப்பு அட்டைகள் வீடு வீடாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும், குடியிருப்பாளர்கள் தங்களுடைய உத்தியோகபூர்வ வாக்குப்பதிவு அட்டைகளை சேகரிக்க வீட்டிலேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.நீங்கள் உங்களது வாக்கு சீட்டினை பெற்றுக்கொண்டீர்களா என்பதை உறுதி செய்துக்கொள்வதற்கு கையொப்பங்கள் தேவை. மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை