வங்காள விரிகுடாவில் பலத்த காற்று, கடல் சீற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
வங்காள விரிகுடாவில் பலத்த காற்று, கடல் சீற்றம்  பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை  லங்காசிறி நியூஸ்

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் மழை பெய்யும் என நாட்டு மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்காள விரிகுடா கடலில் ஆழ்கடல் பகுதிகளில் உள்ள கடற்படை மற்றும் மீனவர் சமூகங்களுக்கு பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசா கடற்கரையில் அமைந்துள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நேற்று (9) 1800UTC இல் 21.4N மற்றும் 84.5Eக்கு அருகில் நிலைகொண்டது.இது மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதற்கிடையில், 16N - 20N மற்றும் 82E - 90E வரையிலான கடற்பகுதிகளில் 70-75 kmph வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், அதிக மழைப்பொழிவு மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் அலைகள் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கீழே உள்ள வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்ட கடல் பகுதிகளுக்கு கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை