3வது டி20: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
லண்டன்,ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது