ரஷியா-உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம், Prisoner swap between Russia and Ukraine concluded
ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றியது. இதற்கிடையே ரஷியா-உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் தலா 103 கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர். 2022-ம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் உள்ள அசோவ்ஸ்டல் எக்கு ஆலையைக் கைப்பற்றியபோது பிடிபட்ட உக்ரைன் வீரர்கள் மற்றும் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவத்தினர் ஊடுருவிய போது பிடிபட்ட வீரர்களை ரஷியா விடுவித்தது. அதேபோல் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனில் சிக்கிய ரஷிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.