மீரட்டில் வீடு இடிந்ததில் எழுவர் உயிரிழப்பு

  தமிழ் முரசு
மீரட்டில் வீடு இடிந்ததில் எழுவர் உயிரிழப்பு

மீரட்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் எழுவர் உயிரிழந்தனர்.மேலும் மூவர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.ஸாகிர் காலனியில் உள்ள அந்த மூன்று மாடிக் கட்டடம் சனிக்கிழமை (செப்டம்பர் 14) இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் கூறினர்.தேசியப் பேரிடர் நிர்வாகப் படையின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.முன்னதாக, கட்டடம் இடிந்தபோது 14 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்பட்டது.எட்டுப் பேர் மீட்கப்பட்டதாகவும் அவர்களில் மூவர் மாண்டுவிட்டதாகவும் மாவட்ட நீதிபதி தீபக் மீனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.எஞ்சிய அறுவரையும் மீட்பதற்கு முன்னுரிமை தந்து பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் நஃபோ அலாவுதீன், அங்குப் பால்பொருள் வர்த்தகம் நடத்தியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.அக்கம்பக்கக் குடியிருப்பாளர்களும் மீட்புப் பணியில் காவல்துறையினர்க்கு உதவி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை