கேரளாவில் கடலுக்கு சென்று மீனவர்களுடன் மீன் பிடித்த கலெக்டர்
திருவனந்தபுரம்,கேரள மாநிலம் அழிக்கோடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று காலை வழக்கம் போல மீனவர்கள் மீன் பிடிக்க கிளம்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த திருச்சூர் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் பாண்டியன். புறப்பட தயாராக இருந்த மீனவர்களின் படகில் அவரும் ஏறிக் கொண்டார். தானும் மீனவர்களுடன் கடலுக்கு வருவதாக அவர் கூறவே மீனவர்கள் மகிழ்ச்சியாக புறப்பட்டனர். மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்குள் சென்றார்.மீனவர்களுடன் கடலுக்கு சென்று, அவர்களுடன் இணைந்து,. வலையில் மீன்பிடித்து மகிழ்ந்தார். மேலும், மீனவர்களின் தொழிலில் உள்ள சிரமம் குறித்து கலந்துரையாடிய கலெக்டர், 5 மணி நேரங்கள் கழித்து கரைக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அப்பகுதி மீனவர்களுக்கு திருவோண வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். மாவட்ட கலெக்டர் மீனவ நண்பனாக தங்களுடன் இணைந்து படகில் வந்து மீன் பிடித்ததால் அப்பகுதி மீனவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலுக்குள் மீனவர்களுடன் ஆட்சியர் மீன்பிடித்த காட்சி சமூக வலைதளங்களில் மீனவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.