டைமண்ட் லீக்: இந்திய வீரர் அவினாஷ் சாப்லே ஏமாற்றம்

  தினத்தந்தி
டைமண்ட் லீக்: இந்திய வீரர் அவினாஷ் சாப்லே ஏமாற்றம்

பிரஸ்சல்ஸ், முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதி சுற்று போட்டி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே கலந்து கொண்டார்.இருப்பினும் 8 நிமிடம் 17.09 வினாடிகளில் இலக்கை கடந்து 9-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தார். கென்யாவின் அமோஸ் சீரம் 8 நிமிடம் 06.90 வினாடியில் இலக்கை கடந்து முதலிடத்தையும், மொராக்கோவின் சோபியான் எல் பக்காலி (8 நிமிடம் 08.60 வினாடி) 2-வது இடத்தையும், துனிசியாவின் முகமது அமின்(8 நிமிடம் 09. 68 வினாடி) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

மூலக்கதை