ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே அதிகரிக்கும் முறைப்பாடுகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,720 முறைப்பாடுகளும், வன்முறைச் செயல்கள் தொடர்பான 28 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 350 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் வருகிற 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.