ஆஸ்திரேலியா - இங்கிலாந்து 3-வது டி20 போட்டி: மழை காரணமாக ரத்து

  தினத்தந்தி
ஆஸ்திரேலியா  இங்கிலாந்து 3வது டி20 போட்டி: மழை காரணமாக ரத்து

லண்டன்,ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்றது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மான்செஸ்டரில் நடைபெற இருந்தது. ஆனால் அங்கு இடைவிடாது மழை பெய்ததான் காரணமாக ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

மூலக்கதை