ஏன் 48 மணி நேரம் காத்திருக்கனும், உடனே ராஜினாமா செய்யலாமே? கெஜ்ரிவாலுக்கு பாஜக கேள்வி? / Why wait 48 hours and resign immediately BJP question to Kejriwal

  மாலை மலர்
ஏன் 48 மணி நேரம் காத்திருக்கனும், உடனே ராஜினாமா செய்யலாமே? கெஜ்ரிவாலுக்கு பாஜக கேள்வி? / Why wait 48 hours and resign immediately BJP question to Kejriwal

டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.இந்த வழக்கில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படு வந்த நிலையில் 6 மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் யாரும் எதிர்பாராத வகையில் இன்னும் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார். அடுத்த வருடம் பிப்ரவரியில் நடக்க உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலை மகாராஷ்டிர தேர்தலுடன் வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வேறொரு ஆம் ஆத்மி தலைவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுத்த பாஜக கட்சியை சேர்ந்த ஹரிஷ் குரானா, "ஏன் 48 மணி நேரம் கழித்து ராஜினாமா செய்ய வேண்டும்? அவர் இன்றே ராஜினாமா செய்ய வேண்டும். கடந்த காலங்களில் கூட, அவர் இப்படி செய்துள்ளார். அவரால் தலைமை செயலகத்திற்கு செல்ல முடியாது, அவரால் கோப்புகளில் கையெழுத்திட முடியாது, பிறகு இதில் என்ன அர்த்தம் உள்ளது என டெல்லி மக்கள் கேட்கின்றனர்?," என தெரிவித்தார்.

மூலக்கதை