வயதானாலும் இன்பதற்கு குறையே இல்லை.. ரகசியத்தை உடைத்த டைட்டானிக் நாயகி |Age is not less fun.. Titanic heroine who broke the secret

  மாலை மலர்
வயதானாலும் இன்பதற்கு குறையே இல்லை.. ரகசியத்தை உடைத்த டைட்டானிக் நாயகி |Age is not less fun.. Titanic heroine who broke the secret

1997 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியோனார்டோ டிகேப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது "டைட்டானிக்" திரைப்படம். இப்படம் உலகமுழுவதும் புகழ் பெற்ற திரைப்படமாகும்.இதில் கதாநாயகியாக நடித்த கேட் வின்ஸ்லட் 2012 ஆம் ஆண்டு எடவர்டை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதி 12 வருடங்கள் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக கடந்துள்ளனர். தற்பொழுது அவர்கள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் காரணத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.அவர் கூறியதாவது "பெண்களுக்கு வயது அதிகம் ஆக அவர்கள் உடல் சோர்விலும், காம ஆசைகளும் குறைய தொடங்கி விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் அனைவரும் தைராயிட் குறைப்பாடால் இருக்கும் என எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் இதன் முக்கிய காரணமே பெண்களின் உடலில் டெஸ்டோஸ்டீரான் எனும் ஹார்மோன் குறைப்பாடும் கூட காரணமாக இருக்கலாம்."இதனால் கேட் வின்ஸ்லட் Testosterone Replacement Therapy {TRT} என்ற சிகிச்சையை தான் எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார். இதனால் அவரது உடல் சோர்வில்லாமலும், உடலுறவிலும் சிறப்பாக இருக்க முடிகிறது என மனம் திறந்து கூறியுள்ளார். இதனால் பெண்கள் தாங்கள்தான் அனைத்திற்கும் காரணம் என எண்ணாமல் மருத்துவரை அணுகி கேட்குமாறு கூறினார்."பெண்கள் வயதாக வயதாக தங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்கின்றனர், இன்னும் ஆதிக்கத்துடன் பவர்ஃபுல்லாக இருக்கின்றனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உலகை எதிர்க்க தைரியம் வருகிறது." என்று கூறியுள்ளார்.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை