மெய்யழகன்’ பட விழாவில் கலகலப்பாக பேசிய நடிகர் அரவிந்த் சாமி / Arvind Samy spoke at the 'Meiyazhagan' film pre release event
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.சென்னையின் மிகப்பெரிய மாலில் ஏராளமான ரசிகர்கள் சூழ மெய்யழகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்வில் கார்த்தி, ஸ்ரீதிவ்யா, அரவிந்த்சாமி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.அந்நிகழ்வில் பேசிய அரவிந்த் சாமி, "என்னை போல் மாப்பிள்ளை வேண்டும் என கேட்பவர்களுக்கு என்னுடைய நிஜ வாழ்க்கையை பற்றி தெரியாதே என நினைப்பேன். பட கதாபாத்திரங்களை வைத்து நான் அப்படிதான் இருப்பேன் என நம்பிவிடுகின்றனர். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. சினிமாவில் ஒரு மேஜிக் இருக்கிறது. என்னை பற்றி எல்லாம் தெரிந்தால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள்" என்று தெரிவித்தார்.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.