விடாமுயற்சி டீசர் விரைவில் வெளியீடு/Vidamuyarchi teaser release soon
அஜித் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து இருக்கும் இரு படங்கள் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் இந்த படத்தில் அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் படக்குழு ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த திரப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என்ற தகவல் பரவி வருகிறது. இது அஜித் ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.