ஷாருக்கான் மகன் இயக்கும் வெப் தொடரில் நடிக்கும் சல்மான் கான்!

  தினத்தந்தி
ஷாருக்கான் மகன் இயக்கும் வெப் தொடரில் நடிக்கும் சல்மான் கான்!

மும்பை,ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் `ஸ்டார்டோம்' என்ற பெயரில் வெப் தொடரை இயக்கி வருகிறார். இதில் ஷாருக்கான் கெளரவ வேடத்தில் நடிக்கிறார். ஆர்யன் கானை ஆரம்பத்தில் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அமெரிக்க திரைப்பட கல்லூரியில் படிப்பை முடித்துள்ள ஆர்யன் கான் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டினார். இதையடுத்து அவரது தந்தை ஷாருக்கான் தனது சொந்த நிறுவனம் சார்பாக தயாரிக்கும் வெப்சீரியஸை மகனை கொண்டு இயக்குகிறார். மகனுக்கு மட்டுமல்லாது மகளுக்கும் ஷாருக்கான் உதவுகிறார். மகள் நடிக்கும் படத்திலும் ஷாருக்கான் கெளரவ வேடத்தில் நடிக்கிறார்.ஆர்யன் கான் இயக்கும் வெப்சீரியஸில் ஷாருக்கான் மட்டுமல்லாது சல்மான் கானும் நடிக்கிறார். சல்மான் கானும், ஷாருக்கானும் படங்களில் இணைந்து நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. விரைவில் இருவரும் சேர்ந்து `டைகர் அண்ட் பதான்' என்ற படத்தில் நடிக்க இருக்கின்றனர். ஆர்யன் கான் தனது வெப்சீரியஸில் கெளரவ வேடத்தில் நடிக்கும்படி சல்மான் கானிடம் கேட்டுக்கொண்டார்.ஷாருக்கான் குடும்பத்தோடு சல்மான் கானுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததால் ஆர்யன் கான் கோரிக்கையை சல்மான் கானால் நிராகரிக்க முடியவில்லை. ஆர்யன் கான் வெப்சீரியஸில் நடிக்க ஒப்புக்கொண்டதோடு நேரம் ஒதுக்கி கொடுத்து நடித்துக்கொடுத்துள்ளார். ஸ்டார்டோம் மொத்தம் 6 எபிசோடுகளாக எடுக்கப்படுகிறது. அதில் கரண் ஜோகர், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், பாபி தியோல் ஆகியோரும் கெளரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர். இதில் ஷாருக்கானும், சல்மான் கானும் ஒரே நேரத்தில் இணைந்து நடிக்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் தனித்தனி எபிசோட்களில் நடிக்கின்றனர்.

மூலக்கதை