கன்னட திரையுலகிலும் பாலியல் தொல்லை - கமிட்டி உருவாக்க முதல்வருக்கு நடிகைகள் கோரிக்கை| Actresses request CM to form committee on sexual harassment in Kannada film industry too
மலையாள திரை உலகில் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள திரை உலகை தொடர்ந்து தமிழ் திரை உலகிலும் பாலியல் தொந்தரவு நடந்ததாக சில நடிகைகள் கூறினர்.தமிழ், மலையாள சினிமாவை தொடர்ந்து கன்னட திரை உலகிலும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகைகள் சஞ்சனா, நீது ஆகியோர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளனர். கன்னட சினிமா உலகில் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இதுபற்றி கர்நாடக சினிமா வர்த்தக சபை கூட்டத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை பற்றிய புகார்கள் குறித்து பேசவிடாமல் தடுத்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.இந்நிலையில் கர்நாடக முதல்மந்திரி சித்தராமையாவுக்கு கன்னட இயக்குனர் கவிதாலங்கேஷ் தலைமையிலான குழுவினர் சினிமா உலகில் பாலியல் தொல்லை பற்றி விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என கடிதம் அனுப்பினார். கன்னட திரை உலகிலும் பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.