இம்ரான் கானின் குற்றங்கள் சிறையில் இருக்க போதுமானது: பாகிஸ்தான் மந்திரி சொல்கிறார்/ Imran Khan's crimes enough to keep him jailed Pak Defence Minister

  மாலை மலர்
இம்ரான் கானின் குற்றங்கள் சிறையில் இருக்க போதுமானது: பாகிஸ்தான் மந்திரி சொல்கிறார்/ Imran Khans crimes enough to keep him jailed Pak Defence Minister

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பலவேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முக்கியமான வழக்குகளில் விடுதலை பெற்ற போதிலும் சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கிறார்.இந்த நிலையில் தன்னை தொடர்ந்து சிறையில் வைப்பதற்கான அரசியலமைப்பை மாற்ற அரசு முயற்சிக்கிறது என இம்ரான் கான் குற்றம்சாட்டியிருந்தார்.இந்த நிலையில் இம்ரான் கானின் குற்றங்கள் சிறையில் அடைப்பதற்கான போதுமானது என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ம் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இருந்து அவர் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இம்ரான் கான் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த கவாஜா ஆசிஃப் "பிடிஐ கட்சி நிறுவனர் இம்ரான் கானின் குற்றங்களுக்கான நீண்ட பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மாற்றம் தேவைப்படதாது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர், அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுடன் மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் நடக்கும் அனைத்திலும் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்" என்றார்.இம்ரான் கான் கைதின்போது, அவரது ஆதரவாளர்கள் ராணுவ அமைப்புகளை தாக்கியது தொடர்பாக பல்வேறு வழக்குகள் அவருக்கு எதிராக போடப்பட்டது.

மூலக்கதை