தமிழ்நாட்டு மக்களின் அன்பு - ஜான்வி உருக்கம்- Janhvi Kapoor says Love of the people of Tamil Nadu

  மாலை மலர்
தமிழ்நாட்டு மக்களின் அன்பு  ஜான்வி உருக்கம் Janhvi Kapoor says Love of the people of Tamil Nadu

இயக்குனர் கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தேவரா'. இந்த படத்தில் ஜான்வி கபூர் படித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இதனிடையே இப்படத்தில் நடித்தவர்கள் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், கலையரசன், அனிருத் என பலரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.அப்போது ஜான்வி கபூர் தனது பேச்சை தமிழில் ஆரம்பித்தார். அவர் பேசுகையில், சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எனது அம்மாவுடன் இருந்த சிறந்த நினைவுகள் எல்லாம் சென்னையில்தான் இருக்கிறது. நீங்கள் எனது அம்மா மீது காட்டிய அன்புதான் நானும், எனது குடும்பமும் இந்த நிலைமையில் இருப்பதற்கான காரணம். நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். எனது அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம் என்றார்.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை