வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஜூனியர் NTR விருப்பம்- Junior NTR wants to act in Vetimaran's direction
இயக்குனர் கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தேவரா'. இந்த படத்தில் ஜான்வி கபூர் படித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே இப்படத்தில் நடித்தவர்கள் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், கலையரசன், அனிருத் என பலரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜூனியர் என்.டி.ஆர், சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான இடம். என்னுடைய ஃபேவரைட் இயக்குனர் வெற்றிமாறன். சார் என்னுடன் ஒரு படம் பண்ணுங்கள். அதை நேரடி தமிழ் படமாக பண்ணலாம். தெலுங்கில் டப் செய்யலாம் என்றார்." I'm gonna ask my favourite director #Vetrimaaran sir, please do a straight Tamil film with me. We can dubbed in Telugu " - #JrNTR pic.twitter.com/IQlG9e1MQF உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.