ஐ.பி.எல்: மீண்டும் பயிற்சியாளர் பதவியில் ரிக்கி பாண்டிங்... எந்த அணிக்கு தெரியுமா...?
புதுடெல்லி,ஐ.பி.எல். தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றாக விளங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கடந்த சில வருடங்களாக பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இருப்பினும் அவரது பயிற்சியின் கீழ் டெல்லி அணியால் ஒரு ஐ.பி.எல் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் அடுத்த ஐ.பி.எல் தொடருக்கு (2025) இந்தியர் ஒருவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க விரும்பியதை அடுத்து ரிக்கி பாண்டிங்கை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கியது.இதையடுத்து எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளது.ஒரு முறை கூட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றாத பஞ்சாப் கிங்ஸ் அணி ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் கோப்பையை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.TER is JAB! ♥️ Official Statement Ricky Ponting joins Punjab Kings as the new Head Coach! #RickyPonting #SaddaPunjab #PunjabKings pic.twitter.com/DS9iAHDAu7