ஜாபர் சாதிக் மீது குற்றப்பத்திரிகையில் இயக்குநர் அமீரின் பெயர் சேர்ப்பு / ED include Ameer Name in Charge sheet
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இயக்குநர் அமீரின் பெயர் 12 ஆவதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. சட்டவிரோத பணத்தை அமீர் கையாண்டதாக குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தெரிவித்து இருக்கிறது. குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு, ஜாபர் சாதிக் சகோதரர் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை 302 பக்கங்களை கொண்டுள்ளன. குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக் சினிமா நிறுவனம் உள்பட எட்டு நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.