திருட வந்ததாக மன நலம் பாதித்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்து சூடு போட்ட கிராம மக்கள் - வீடியோ-Villagers tied a mentally ill woman to a tree and set her on fire for stealing - video
உத்தரப் பிரதேசத்தில் திருட வந்ததாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது கணவனையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு போட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. உ.பியில் தியோரியா [Deoria] மாவட்டத்தில் சுரவுலி [Surouli] பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மன நலம் பாதிக்கபட்ட நடுத்தர வயது பெண் உலவியுள்ளார். சுரவுலியில் மற்றொரு பகுதியை சேர்ந்த அந்த பெண் வழிதவறி அங்கு வந்ததாக தெரிகிறது. எனவே அவரை தேடிக்கொண்டு பெண்ணின் கணவனும் அந்த கிராமத்துக்குள் வந்துள்ளார். இவர்கள் இருவரையும் திருட வந்தவர்கள் என சந்தேகித்த கிராம மக்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் அந்த பெண்ணின் கால்களில் சூடு வைத்து அதன்பின் அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். பெண்ணின் கட்டை அவிழ்த்து விடுவதற்கு முன் அவரிடம் சிலர் அத்துமீறியதாவும் தெரிகிறது. அவர்களை கிராமத்தினர் அடித்து சூடுவைத்து சித்ரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.UP के #देवरिया में चोर समझकर मंदबुद्धि महिला और उसके पति को दबंगों ने पेड़ में बांधकर पीटा !घर से बुलाकर पेड़ में रस्सी से बांधकर पिटाई की, महिला बेहोश, अस्पताल में भर्ती, वीडियो वायरल !पुलिस ने 2 दिनों तक मामले को दबाये रखा !!सुरौली थाना क्षेत्र के परसा जंगल गांव का मामला !! pic.twitter.com/K9VcIraGd7