'காங்கிரஸ் நாய்களை புதைப்பேன்..' ராகுல் காந்தியின் நாக்குக்கு விலை வைத்த எம்.எல்.ஏ. மீண்டும் சர்ச்சை-'I will bury Congress dogs..' MLA who paid price for Rahul Gandhi's tongue, controversy again
நாட்டின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுத்து வருபவருக்கு மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் உள்ள ஷிண்டே சிவசேனா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் ரூ.11 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தார். தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது காங்கிரஸ் குறித்து மீண்டும் கீழ்த்தரமான கருத்து ஒன்றைக் கூறி சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலந்துகொள்ளும் எனது நிகழ்ச்சியில் காங்கிரஸ் நாய்கள் நுழைய முயன்றால் அவர்களை அங்கேயே அப்போதே புதைத்து விடுவேன் என்று சஞ்சய் கெய்க்வாட் பேசியுள்ளார்.முன்னதாக கடந்த மாதம் கெய்க்வாடின் காரை போலீஸ் அதிகாரி ஒருவர் கழுவும் வீடியோ வைரலாகியது. கடந்த மாரச் மாதம் போலீஸ் லத்தியால் நபர் ஒருவரை சஞ்சய் தாக்கும் வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மேலும் தான் ஒரு புலியை வேட்டையாடியதாக கடந்த பிப்ரவரியில் சஞ்சய் கெய்வாட் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.Video of a cop cleaning Shiv Sena MLA Sanjay Gaikwad's car in Maharashtra's Buldana has gone viral, and has stirred a controversy.Gaikwad said the car was willingly being cleaned by one of the cops in his security. The MLA claimed the cop had vomitted inside the car.… pic.twitter.com/gMR6PP9xIDMaharashtra CM Eknath Shinde led Shiv Sena MLA Sanjay Gaikwad from Buldhana violating the law by taking police lathi to disperse the crowd. Mr Gaikwad mercilessly beating one of the assembled person. Earlier in a day, major scuffle broke out between two Shiv Sena (Shinde) MLAs. pic.twitter.com/I4gRy6PjsX