Jammu and Kashmir Assembly Elections- ஜம்மு- காஷ்மீர் சட்டசபை தேர்தல்
ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை தோ்தல் நடைபெறுகிறது. ஜம்மு- காஷ்மீ ருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டசபைத் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.ஜம்மு- காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டசபையில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தோ்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி, காஷ்மீரில் முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில் இன்று (புதன்கிழமை) தோ்தல் நடைபெற்றது.இதில், 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன. மொத்தம் 219 வேட்பாளா்கள் இத்தோ்தலில் களத்தில் நின்றனர். இதில் 90 போ் சுயேச்சை வேட்பாளா்கள்.தோ்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறு வதை உறுதிசெய்ய பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. துணை ராணுவப் படையினா், ஜம்மு- காஷ்மீா் ஆயுதப் படையினா், போலீசார் ஆகியோா் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று முடிந்தது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.பின்னர், முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ந்தேதியும், 3-ம் கட்ட மாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ந்தேதியும் தோ்தல் நடத்தப்படவுள்ளது. அடுத்த மாதம் (அக்டோ பா்) 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.