3 killed and 12 injured in building collapse- கட்டிடம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
டெல்லி கரோல் பாக்கில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து தகவல் அறிநத் சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து காலை 9.11 மணிக்கு தகவல் கிடைத்ததும் டெல்லி தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.இதுவரை குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தேசிய தலைநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.#UPDATE | Rescue operation underway after a house collapsed in Karol Bagh area of Delhi. 7 persons have been rescued so far.It is feared that some more may be trapped. Local police along with other agencies are carrying out rescue operations: Delhi PoIice pic.twitter.com/pNHNDnA5p2