ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்துச் சிதறியது எப்படி?.. மொபைல் போன்களையும் வெடிக்க வைக்க முடியுமா?-How did the pagers explode at the same time?.. can mobile phones be exploded too?

  மாலை மலர்
ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்துச் சிதறியது எப்படி?.. மொபைல் போன்களையும் வெடிக்க வைக்க முடியுமா?How did the pagers explode at the same time?.. can mobile phones be exploded too?

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பலரின் செய்தி பரிமாற்ற பேஜர்கள் நேற்றைய தினம் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 3000 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். தைவானில் உள்ள GO APPOLO நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்து பிரத்தேயகமாக தயாரிக்கப்பட்ட இந்த பேஜர்கள் இந்த வருட தொடக்கத்தில் ஹிஸ்புல்லாவினரின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் தகவல்கள் கசியும் அபாயம் உள்ளதால் பேஜர் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும்போதே இந்த பேஜர்களில் 3 கிராம் வெடிபொருள் வைக்கப்பட்டது என்றும் இதற்கு பின்னால் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட்டின் கை உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல நாட்கள் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் ஹேக்கிங் மூலம் இந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.BREAKING: Massive explosion hits Hezbollah stronghold in Lebanon! Hundreds of members injured, many seriously, after pagers detonate. Officials call it "biggest security breach" in a year. Chaos ensues with 30-minute prolonged blasts. #Hezbollah #Lebanon #Explosion pic.twitter.com/k53wmmkz4oசினிமாவில் வருவது போல் இதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதலை ஹேக்கிங் மூலம் செய்ய முடியும் என்று நிரூபணமாகியுள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் அனைவரும் கைகளிலும் உள்ள ஸ்மார்ட் போன்களை இதுபோன்ற ஹேக்கிங் மூலம் அடுத்தடுத்து வெடிக்க செய்ய முடியுமா என்ற கேள்வியே பலருக்கு அச்சமூட்டுவதாக உள்ளது. கத்தி, துப்பாக்கி, ஏவுகணை, பையோ வார் என்பதைத் தாண்டி டெக்னலாஜிக்ல் வார்ஃபேரின் மீது அனைவரின் கவனமும் தற்போது திரும்பியுள்ளது. ஸ்மார்ட் போன்களையும் பேஜர்கள் வெடிக்கச் செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பேஜர்கள் போலல்லாதது போன்களை வெடிக்க வைக்கும் நடைமுறை கொஞ்சம் சிக்கலானது. பேஜர்களின் பயன்படுத்தப்படும் அதே லித்தியம் அயான் பேட்டரிகள் தான் சிமார்ட் போன்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிக ஆற்றலை தக்கவைத்து கொள்வதால் லித்தியம் அயான் பேட்டரிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதிக ஆற்றலை சேமிக்கும் என்றபோதே அதிக சூடேறும் மற்றும் வெடிக்கும் என்பதும் நிச்சயமாகிறது. அதிக சூட்டினால் போன்கள் வெடிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருவதே. தயாரிக்கப்படும்போது ஏற்படும் கோளாறுகளாலும் வாங்கிய சிறிது நாட்களிலேயே போன்கள் வெடிக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது. ஆனால் தயாரிக்கப்படும்போது திட்டமிட்டு தற்போது நடத்த பேஜர் தாக்குதல் போல நடத்த முடியும். ஹிஸ்புல்லா விவகாரத்தில் முன்கூட்டியே பேஜர்களில் வெடிமருந்து வைக்கப்பட்டிருப்பதையும் அதை ஒரே நேரத்தில் வெடிக்க வைக்க ரிமோட் மூலமான கோஆர்டிநேட்டிங் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மிகவும் எளிமையான பேஜர்களிலேயே இந்த கோஆர்டி நேட்டிங் தொழில்நுட்பம் பொருத்தப்படும் நிலையில் அதிக சிக்கலான சாப்ட்வெர் மற்றும் மெட்வொர்க் கனெக்ஷன் கொண்ட ஸ்மார்ட் போன்களில் இதை பயன்படுத்துவது மிகவும் சுலபம். ஒவ்வொருவரும் வெவேறு ஸ்மார்ட் போன்கள் பிராண்டுகளை பயன்படுத்துவதால் இதன் சாத்தியம் சற்று குறைவாக இருக்கலாம். ஆனால் ஹார்ட்வேர் மூலம் அல்லாது சாப்ட்வேர் மூலம் அனைத்து போன்களையும் அணுகுவது எளிதாக உள்ளதால் தகவல்களை திருடும் சைபர் தாக்குதல்கள் வெடிவிபத்துகளை ஏற்படுத்தும் அளவுக்கு பயங்கரவாத நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறுகளையும் நிபுணர்கள் முன்வைக்கின்றர்.பேஜர் விவகாரத்தில் ஸ்பாட்வேர் மூலம் ஹேக் செய்யப்பட்டு லித்தியம் அயான் பேட்டரிகளுக்கு ஓவர் ஹீட் கொடுக்கப்பட்டு அதன்மூலம் வெடிமருந்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதே ஓவர் ஹீட்டிங் நடைமுறையை ஹேக்கிங் மூலம் பயன்படுத்தி பேஜர்களை விட அதிக சக்தி உடைய லித்தியம் அயான் பேட்டரி கொண்ட போன்களையும் வெடிக்க வைக்க முடியும் என்பதே நிபுணர்கள் எட்டியுள்ள முடிவாகும்.

மூலக்கதை