4 பேர் டக்-அவுட், ஒருநாள் போட்டியில் 106 ரன்களில் ஆல் அவுட்.. அதிர்ச்சியளித்த தென் ஆப்பிரிக்கா / SAvsAFG SA all out for 106
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி சோர்சி முறையே 9 மற்றும் 11 ரன்களை எடுத்து அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் மார்க்ரம் 2 ரன்களில் ஏமாற்றினார். இவருடன் களமிறங்கிய ஸ்டப்ஸ் ஐந்து பந்துகளை எதிர்கொண்ட நிலையில், ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கைல் வெர்ரைன் (10) மற்றும் ஜேசன் ஸ்மித் (0) சொதப்பினர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன வியான் முல்டர் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஆன்டில் மற்றும் நிகிடி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 33.3 ஓவர்களில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபரூக்கி நான்கு விக்கெட்டுகளையும், காசன்ஃபர் மூன்று விக்கெட்டுகளையும், ரஷித் கான் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.