தனுஷ் இயக்கத்தில் உருவாகிறது ‘இட்லி கடை’

  தமிழ் முரசு
தனுஷ் இயக்கத்தில் உருவாகிறது ‘இட்லி கடை’

நடிகர் தனுஷ் தற்போது இளையர்களைக் கவரும் விதமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் ‘குபேரா’ என்ற படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களுமே விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சூட்டோடு சூடாக அடுத்த படத்துக்கு தாவிவிட்டாராம் தனுஷ். ஒரு புதுப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் தேனி பகுதியில் நடைபெற்று வருகிறதாம். இப்படத்துக்கு ‘இட்லி கடை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல். இதில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிப்பதாகவும் ராஜ் கிரண், சத்தியராஜ் முக்கியமான வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இரண்டாவது நாயகியாக ஷாலினி பாண்டே நடிக்கிறாராம்.இது தனுஷின் நடிப்பில் உருவாகும் 51வது படமாகும். இந்நிலையில் அவர் நடிக்கும் 52வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. தற்காலிகமாக ‘டி-52’ என்று குறிப்பிடப்படும் இந்தப் படத்தை, ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

மூலக்கதை