பூந்தமல்லி கிளைச் சிறையில் கைதி தற்கொலை முயற்சி

  தினத்தந்தி
பூந்தமல்லி கிளைச் சிறையில் கைதி தற்கொலை முயற்சி

சென்னை,சென்னை பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் கைதி ஒருவர் எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2011-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் நடந்த ரத யாத்திரையின்போது, அத்வானி சென்ற பகுதியில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் ஜாகீர் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் அவரால் வெளியே செல்ல முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த ஜாகீர் உசேன் சிறையில் எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இந்த நிலையில் ஜாகீர் உசேனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.#JUSTIN || பூந்தமல்லி கிளை சிறையில் அத்வானி வழக்கில் கைது செய்யப்பட்டவர் த*கொலை முயற்சிகடந்த 2011ம் ஆண்டு ரத யாத்திரையின் போது அத்வானி சென்ற பகுதியில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்கைதான ஜாகிர் உசேன் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்சென்னை… pic.twitter.com/xJoX3j0sw2

மூலக்கதை